உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் தொடரும் விதிமீறல்

சாலையோர பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் தொடரும் விதிமீறல்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார், பேரம்பாக்கம், மணவாளநகர், கொண்டஞ்சேரி, மப்பேடு உட்பட பல இடங்களில் திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பதாகைகள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் பகுதியில் விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்கதையாகவே நடந்து வருகிறது. அதேபோல், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே விளம்பர பதாகைகள் அதிகரித்துள்ளது.இந்த விதிமீறலுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, விளம்பர பதாகைகள் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை