உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய பைக் பறிமுதல்

மணல் கடத்திய பைக் பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த நெமிலியகரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது 'பேஷன் புரோ' இரு சக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டருந்த நபர் போலீசாரைக் கண்டதும் வாகனத்தை போட்டு விட்டு தப்பியோடினார். இதையடுத்து போலீசார் விரைந்த சென்று பார்த்தபோது 25 கிலோ மணல் மூட்டைகள் இரண்டு கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பேஷன் புரோ இரு சக்கர வாகனத்தையும், இரண்டு மணல மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கீழ்விளாகம் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் மீது வழக்கு விசாரித்து வருகின்றனர். lகவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில், போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஒரு நபர், டூ- - வீலரில் ஐந்து மணல் மூட்டைகளை ஏற்றி வந்தார். போலீசாரை கண்டதும் சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். ஆரணி ஆற்றில் மணல் திருடி, மூட்டைகளாக கட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. டூ-- வீலருடன் மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ