உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை

திருவாலங்காடு :திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர அரசு அனுமதியுடனும் தனியார் கிளினிக், மருத்துவமனைகள் செயல்படுகின்றன.இங்கு வரும் நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், மாவட்டத்தில் உள்ள சில கிராம பகதிகளில், மருத்துவம் படிக்காமலேயே சிலர் மருந்து கடைகளிலும், பெட்டி கடைகளிலும் சிகிச்சை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மருந்து கடை வைத்திருக்கும் சிலர், மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் ஊசி போடுவது, மருத்துவர் பரிந்துரை செய்யும் சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்குவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.எனவே, மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிகமாக விற்பனை செய்யப்படும் காப் சிரப், வலி நிவாரணி மாத்திரை, துாக்க மாத்திரை உள்ளிட்டவை கடைகளில் விற்கப்படுவதை மருத்துவ துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என, அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை