உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  லிப்ட் கொடுத்து வழிப்பறி செங்குன்றம் வாலிபர் கைது

 லிப்ட் கொடுத்து வழிப்பறி செங்குன்றம் வாலிபர் கைது

வளசரவாக்கம்: பைக்கில் 'லிப்ட்' கொடுத்து, வாலிபரை தாக்கி மொபைல் போன் பறித்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 21. கோயம்பேடு பூ சந்தையில் உள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார். கடந்த 11ம் தேதி இரவு குன்றத்துார் சென்று, விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி அருகே பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், 'நாங்கள் கோயம்பேடு செல்கிறோம்; உங்களையும் அங்கு இறக்கி விடுகிறோம்' எனக் கூறி பைக்கில் அழைத்து சென்றனர். வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், முத்துமாரி அம்மன் கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஆறுமுகத்தை இறங்க சொல்லி, அவரை தாக்கி, மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து விசாரித்த வளசரவாக்கம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட செங்குன்றம், பாடியநல்லுாரைச் சேர்ந்த விஜய்பிரசாத், 27, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை