உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருட்கள் விற்றால் கடை உரிமம் ரத்து: கலெக்டர்

போதை பொருட்கள் விற்றால் கடை உரிமம் ரத்து: கலெக்டர்

பொன்னேரி:பொன்னேரியில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட போலீசார், ஆவடி கமிஷனரகம் போலீசார் மற்றும் பல்வேறு துறையினர், போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில், 1,300 சோதனைகள் நடத்தப்பட்டு, 350 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள ஆறு சோதனை சாவடிகளிலும், 24 மணி நேரமும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பள்ளி, கல்லுாரிகளின் அருகே, போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லுாரிகளின் அருகே முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.கடை மற்றும் நிறுவனங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்தால், முதல் முறை என்றால் அபராதம் விதித்து, 30 நாட்களுக்கு கடைக்கு 'சீல்' வைக்கப்படுகிறது. அதே கடையில் மீண்டும் போதை பொருட்கள் விற்பனை செய்தால், கடையின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை