உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு கூட்டுறவு பணியாளர் சங்கம் அறிவிப்பு

 எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு கூட்டுறவு பணியாளர் சங்கம் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணிப்பு செய்வதாக, கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அறிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், நகர மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர் மற்றும் விற்பனையாளர்கள், மகளிர் உரிமை திட்டம் மற்றும் எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ள நிர்ப்பந்திக்கபடுகின்றனர். இதனால், கடன் சங்க உறுப்பினர்களின் நலன் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், பணியாளர் சார்ந்த நிறுவனங்களின் நலனும் பாதிக்கிறது. எனவே, மேற்கண்ட பணிகளில் ஈடுபட, நிர்பந்திப்பதை கைவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை புறக்கணிப்பது என, மாநில சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திலும், மகளிர் உரிமை திட்டம் மற்றும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை புறக்கணிக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ