உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் கழிவுகள் குவிப்பு சிறுவாபுரி பக்தர்கள் அதிருப்தி

சாலையோரம் கழிவுகள் குவிப்பு சிறுவாபுரி பக்தர்கள் அதிருப்தி

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் குவிந்து வரும் கழிவுகளால், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில், கவரைப்பேட்டை அடுத்த புதுரோடு சந்திப்பில் நான்கு சக்கர வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்படுகிறது.அங்கிருந்து ஆட்டோ மற்றும் மினி பேருந்துகள் வாயிலாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலையோரம் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.இந்த இணைப்பு சாலையில் காத்திருக்க முடியாத அளவிற்கு, சாலையோரம் மலைபோல் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல், சிறுவாபுரி பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதனால், சிறுவுாபுரி வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், சின்னம்பேடு ஊராட்சி நிர்வாகமும் இணைந்து, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையை எப்போதும் துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை