உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி கோவில் விவகாரம் பொன்னேரியில் பேச்சுவார்த்தை

சிறுவாபுரி கோவில் விவகாரம் பொன்னேரியில் பேச்சுவார்த்தை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, செவ்வாய்க்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.அந்த சமயங்களில் உள்ளூர்வாசிகள் சுவாமியை தரிசனம் செய்ய, தனிவழி ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக, அவ்வப்போது கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.இதுதொடர்பாக நேற்று பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில், உள்ளூர்வாசிகளுக்கு தனிவழி என்பது எந்த கோவிலிலும் நடைமுறையில் இல்லை எனவும், இதுதொடர்பாக ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தலைமையில், மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்வது என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோவிலுக்கு புதிதாக சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 30ம் தேதி மீண்டும் சமாதான கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை