உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு பகுதியில் எலும்புக்கூடான மின்கம்பம்

குடியிருப்பு பகுதியில் எலும்புக்கூடான மின்கம்பம்

வெங்கத்துார், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சி. இங்குள்ள மணவாள நகர் பகுதியில், கபிலர் நகர், அழகிரி தெரு, கண்ணகி தெரு, அம்மன் தெரு போன்ற 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இப்பகுதியில், அழகிரி, கண்ணகி, அம்மன் ஆகிய மூன்று தெருக்கள் சந்திக்கும் பகுதியில் குடியிருப்புகள் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது.இந்த மின்கம்பம் மிகவும்சேதமடைந்து எலும்புக்கூடாக மாறி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதிவாசிகள், கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், இவ்வழியாக தான் ரேஷன் கடை, கோவில், சர்ச், பள்ளிக்கு மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.எனவே, மின்கம்பத்தை சீரமைக்கவும், கால்வாயிலிருந்து வேறிடத்திற்கு மாற்றவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை