உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆற்றை அங்குள்ள பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேமிக்கப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு, 1.81 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. மழைநீர் முக்கிய நீர் ஆதாரம்.மழை பெய்ய துவங்கியதற்கு முன் இதில் 1 டி.எம்.சி., நீர் இருந்தது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து, 5,400 கன அடி வரை வந்தது. இதனால் இதன் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்தது.இதன் காரணமாக, 1 டி.எம்.சி., அளவிற்கு இருந்த ஏரியின் கொள்ளளவு, தற்போது, 1.64 டி.எம்.சி., நீர் உள்ளது. தற்போதைய நீர்மட்டம், 29.50 அடி. நேற்று முன்தினம் முதல், ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை