உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரக்கிளையில் தெருவிளக்கு ராஜாநகரத்தில் புது டெக்னிக்

மரக்கிளையில் தெருவிளக்கு ராஜாநகரத்தில் புது டெக்னிக்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ராஜாநகரம் ஏரிக்கரையில், மிகவும் சிக்கலான சாலை வளைவுகள் அதிகளவில் உள்ளன. இதனால், விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.கடந்த 10 ஆண்டுகளில், இப்பகுதியில் உள்ள சில திருப்பங்கள் நேர் செய்யப்பட்டன. இருப்பினும், ஏரிக்கரையின் வடக்கு பகுதியில், நரசிம்மபேட்டையை ஒட்டியுள்ள சாலை திருப்பத்தை சரிசெய்ய முடியவில்லை. இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்பவர்களும் விபத்து அபாயத்தில் தவிக்கின்றனர்.இந்நிலையில், இந்த திருப்பத்தில் தெருவிளக்கு கம்பத்திற்கு மாற்றாக, உயரமாக வளர்ந்துள்ள மரத்தில், எல்.இ.டி., மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. சாலையோரத்தில் வளர்ந்துள்ள மரத்தின் கிளை, சாலையின் குறுக்கே உயரமாக அமைந்துள்ளதால், மின்விளக்கு வெளிச்சம், சாலையில் சீராக வீசுகிறது. பகுதிவாசிகளின் இந்த ஏற்பாடு, வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை