உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதடைந்த பள்ளி கட்டடம் விபத்து அச்சத்தில் மாணவர்கள்

பழுதடைந்த பள்ளி கட்டடம் விபத்து அச்சத்தில் மாணவர்கள்

திருவள்ளூர்:வெள்ளவேடு அடுத்துள்ளது, திருமழிசை பேரூராட்சி. இங்குள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பிளஸ் ௨ வரை 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பள்ளி வகுப்பறை கட்டடங்கள் அகற்றப்படாததால் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்து பயன்பாடில்லாத வகுப்பறை கட்டடங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி