உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திடீர் நகரில் ஆறாக பாயும் கழிவுநீர்

திடீர் நகரில் ஆறாக பாயும் கழிவுநீர்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது பில்லாஞ்சி திடீர் நகர். பில்லாஞ்சி ஏரியின் உபரிநீர் வெளியேற, 15 அடி அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் திடீர் நகர் வழியாக பாய்கிறது. உபரிநீர் கால்வாய் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. தெருவை ஒட்டி பாய்ந்த கால்வாயின் அகலம், தெருவை விட அதிகமாக உள்ளது. கால்வாய்க்கு தடுப்பு சுவர் இன்றி திறந்த நிலையில் உள்ளதால், தெருவில் குழந்தைகள் விளையாடவும் முடியவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் வீசுகிறது. கால்வாய்க்கு மேல்தளம் அமைத்தால், ஓரளவிற்கு நிம்மதி அடைவோம் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த பகுதியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றவும் தனியே கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை