உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

 டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

சென்னை: இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பு ஆதரவில், அமெட் பல்கலை உடற்கல்வியியல் துறை சார்பில், தென் மண்டல பல்கலை டேபிள் டென்னிஸ் போட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று நிறைவடைந்தது. பல்கலைகளுக்கு இடையிலான ஆடவர் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., மற்றும் பெங்களூரு ஜெயின் பல்கலை அணிகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பரபரப்பான இறுதிப் போட்டியில், இரு அணிகளும் மாறி மாறி செட்களில் வெற்றி பெற்ற நிலையில், 3 - 2 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்தியது. இந்த போட்டியில், சென்னை பல்கலை அணி மூன்றாம் இடத்தையும், வேல்ஸ் பல்கலை அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. சிறந்த ஒழுக்க அணியாக வேலுார் வி.ஐ.டி., பல்கலை தேர்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை