உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருள் கேந்திரமானது தமிழகம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தாக்கு

போதை பொருள் கேந்திரமானது தமிழகம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தாக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், மகளிர் அணி, மாணவரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின் ஆகியோர் பேசியதாவது:தமிழகத்தில், கஞ்சா போதையைத் தொடர்ந்து, தற்போது, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவரே போதை மாத்திரைக்கான மூலப் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்துள்ளார். இந்தியாவிலேயே போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் மாறிவிட்டது. இனியும் தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் போதை மாநிலமாக மாறி விடும்.இது குறித்து, கூட்டத்திற்கு வந்துள்ள மகளிர், மாணவரணி உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, எம்.பி., தேர்தலில், நம் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர். பின், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை