உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தார் உருக்கும் நிலையத்திற்கு தாசில்தார் முன்னிலையில் சீல்

 தார் உருக்கும் நிலையத்திற்கு தாசில்தார் முன்னிலையில் சீல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அனுமதியின்றி இயங்கி வந்த தார் உருக்கும் தொழிற்சாலைக்கு, தாசில்தார் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. சாலை பணிக்காக, மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரம் கிராமத்தில், பழைய குடோன் ஒன்றில், ஆறு மாதங்களாக தார் உருக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. அதிலிருந்து வெளிவரும் கரும்புகையால், அருகில் வசிக்கும் கிராம மக்கள், சுவாச பிரச்னை உள்ளிட்ட உடல் நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையத்தை ஒதுக்குப்புறமான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, ஆறு மாதங்களாக கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உரிய அனுமதியின்றி தார் உருக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்குமார் முன்னிலையில், நேற்று தார் உருக்கும் தொழிற்சாலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை