உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 நாட்களாக விழுந்து கிடக்கும் கம்பம், மின்கம்பத்தால் அச்சம் அலட்சியம் காட்டும் மின்வாரியம்

10 நாட்களாக விழுந்து கிடக்கும் கம்பம், மின்கம்பத்தால் அச்சம் அலட்சியம் காட்டும் மின்வாரியம்

சோழவரம்:ஜெகன்னாதபுரம் கிராமத்தில் சூறை காற்றில் உடைந்து விழுந்த கம்பம் மற்றும் அறுந்த மின்கம்பிகளை சீரமைப்பதில், மின்வாரியம் அலட்சியம் காட்டுவதால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் கிராமத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன் சூறை காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. அதிலிருந்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன.இதுகுறித்து விவசாயிகள், மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு சென்றனர். அதன்பின், விழுந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:நிலங்களில் விழுந்து கிடக்கும் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளால், விவசாய பணிகள் பாதித்துள்ளன. மின்சாரம் இல்லாமல் 10 நாட்களாக ஆழ்துளை மோட்டார்களை இயக்க முடியாத நிலை உள்ளது. மின்வாரியத்திடம் தெரிவித்தும் பயனில்லை.நான்கு இடங்களில் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால், விவசாய பணிகளை மேற்கொள்ளும் போது அச்சமாக உள்ளது. எனவே, புதிய மின்கம்பங்களை அமைத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை