உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் உள்ள சிவசக்தி சித்தேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் காணும் பொங்கலை ஒட்டி, நேற்று மலைச்சுற்று விழா நடந்தது. இதையொட்டி, மூலவர் ஈஸ்வரனுக்கு காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், 5,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, மாலை, 7:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், திருத்தணி முருகன் துணை கோவிலான சப்தகன்னியம்மன் கோவிலில், காணும்பொங்கல் முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.கே.ஜி.கண்டிகையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர்கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை