உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ளது, புட்லுார் ரயில் நிலையம். நேற்று காலை திருத்தணியில் இருந்து, சென்னை நோக்கி புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.அப்போது, ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வந்த போது, ரயிலிலிருந்த ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த வெங்கடநாகேஸ்வர ராவ் போயினா, 50, என தெரியவந்தது.இதுகுறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை