உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருதரப்பினர் மோதல் போலீசார் குவிப்பு

இருதரப்பினர் மோதல் போலீசார் குவிப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் பள்ளி மாணவியை, சிறுவர்கள் கிண்டல் செய்த விவகாரம் இரு பிரிவினர் இடையே மோதலாக மாறியது. பள்ளி மாணவியர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து மூவரை கைது செய்தனர். சிறுவர்கள் தரப்பினர் அளித்த புகார் மீது வழக்கு பதிந்த போலீசார், கைது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நேற்று, பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில், சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையிலான போலீசார், சமாதானம் பேசினர். பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், நாள் முழுதும் பதற்றமான சூழல் நிலவியது. இரு தரப்பினரும் பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக, நேற்று மாலை உறுதி அளித்தனர். இருப்பினும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, சாலையில் தடுப்பு அமைத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை