உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஒரு மதிப்பெண்ணிற்காக உயிரை மாய்த்த வாலிபர்

 ஒரு மதிப்பெண்ணிற்காக உயிரை மாய்த்த வாலிபர்

புழல்: சி.ஏ., தேர்வில் ஒரு மதிப்பெண் குறைவாக வந்ததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். புழல் அடுத்த லட்சுமிபுரம் மகாலட்சுமி நகர், பச்சையப்பன் காலனியைச் சேர்ந்தவர் சுந்தர், 34; தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன் சி.ஏ., தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட, ஒரு மதிப்பெண் குறைவாக வந்துள்ளது. இதில் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்றிரவு, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை