சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய திருத்தணி எம்.எல்.ஏ.,
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர், 40; இவர், நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு வந்துக் கொண்டிருந்தார்.அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு கல்லுாரி பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இந்த விபத்தில், சிக்கந்தர் பலத்த காயத்துடன் சாலையோரம் இருந்த போது, அவ்வழியாக வந்த திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தன் காரை நிறுத்தி, சிக்கந்தரை காரில் ஏற்ற முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ்சை பார்த்ததும், எம்.எல்.ஏ., நிறுத்தி அதில் சிக்கந்தர்ரை ஏற்றி, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிக்கந்தரிடம் உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.