சிமின்ட் சாலை சீரமைக்கப்படுமா?
திருத்தணி நகராட்சியில் மேல்திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு செல்லும் சாலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டது. இச்சாலை முறையாக பராமரிக்காததால் தற்போது, சேதம் அடைந்து, பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு ரேஷன் பொருட்கள் கொண்டு வரும் லாரி, மற்றும் வேன் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சிமென்ட் சாலை சேதம் அடைந்துள்ளதால் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் கால்தவறி விழுந்து படுகாயத்துடன் செல்கின்றனர். அப்பகுதிக்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சிமென்ட் சாலை சீரமைக்க வேண்டும்.- -எஸ்.வெங்கடேசன், திருத்தணி.
தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள்
திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை சாலை வழியாக சாமந்திபுரம் பங்களா செல்லும் ஒன்றிய தார்ச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இச்சாலை அருகே விவசாய நிலமும் உள்ளது. இந்நிலையில், ஏரிக்கரை தார்ச்சாலை முடிவு ‛பம்ப் அவுஸ்' பகுயில், மின்கம்பம் ஒன்று சாய்ந்துள்ளன. மேலும் அந்த மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின்ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், விவசாய நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்வதற்கும் அச்சப்படுகின்றனர். தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க வேண்டும், கூடுதல் மின்கம்பம் அமைக்க வேண்டும் என பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ---க.விநாயகம், செருக்கனுார்.நிழற்குடைக்கு படிகள் இல்லை
திருத்தணி- - நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை வேலஞ்சேரி காலனி கிராமத்தில், பயணியர் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் மாநில நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.ஆனால் நிழற்குடை அருகே மழைநீர் வடிகால்வாய் புதியதாக கட்டி பல மாதங்கள் ஆகியும் அதை மூடப்படாமல் உள்ளது. மேலும், நிழற்குடைக்கு செல்வதற்கு படிகள் அமைக்கப் படாததால் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன்கருதி ஊராட்சி நிர்வாகம், நிழற்குடைக்கு படிகள் அமைக்க வேண்டும்.- -எஸ்.செல்வம், வேலஞ்சேரி.