உள்ளூர் செய்திகள்

108 பால்குட அபிஷேகம்

திருவள்ளூர் : பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் மாரியம்மன் கோவில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி நேற்றுமுன்தினம், 108 பால்குட அபிஷேக விழா நடந்தது. காலை 10 மணிக்கு, திருமுருகன் கோவிலில் இருந்து, 108 பால் குடங்களை சுமந்தவாறு பெண்கள் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவர் அம்மன், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மோகனசுந்தரம், இளங்கோ தலைமையில் விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை