| ADDED : ஆக 29, 2011 11:15 PM
திருவள்ளூர் : விவசாயிகளுக்கு, சில்பாலின் தொழில்நுட்பம் மூலம், மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி, திரூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்டது.கொசஸ்தலையாறு மற்றும் ஆரணியாறு உப்படுகையில் அமைந்துள்ள கலாம்பாக்கம், புலியூர், சின்னக்காவனம், முக்கரம்பாக்கம், சோழவரம், கிலாம்பாக்கம், பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களில், அண்மையில் திரூரிலுள்ள வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் தேவநாதன் பயிற்சியை துவக்கி வைத்தார். உதவிப் பேராசிரியர் குமரபெருமாள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.350க்கும் மேற்பட்ட விவசாயிகள், இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.