உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

திருவள்ளூர் புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆர்.சீனிவாச பெருமாள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றார். 2010-ம் ஆண்டு தேனியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு சிவகாசியில் பணியாற்றினார். தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார். அதன் பின் பதவி உயர்வு பெற்று மதுரையில் துணை போலீஸ் கமிஷனர் மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி மாற்றம் செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.முன்தாக எஸ்.பி. சீனிவாச பெருமாள் நேற்று காலை,6:30 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தார்.l திருத்தணி போலீஸ் நிலைய சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மார்டின் பிரேம்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மதியரசன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை திருத்தணி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி