உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூடிய ரயில்வே கேட் வழியாக ஆபத்தை உணராமல் பயணம்

மூடிய ரயில்வே கேட் வழியாக ஆபத்தை உணராமல் பயணம்

திருவாலங்காடு:சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கமாக தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.அதேபோல, தண்டவாளத்தை கடந்து கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.எனவே, வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை பாதுகாப்பாக கடக்க, ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட் 10 - 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திறக்கப்படுகிறது. சில இருசக்கர வாகன ஓட்டிகள், மூடிய கேட்டை ஆபத்தை உணராமல் வாகனத்தை வளைத்து கடந்து செல்கின்றனர்.அந்த சமயத்தில், ரயில் வந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விபத்தை தடுக்க, திருவாலங்காடு ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை