உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கஞ்சா கடத்திய இருவர் கைது

 கஞ்சா கடத்திய இருவர் கைது

ஆர்.கே.பேட்டை: ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி., உத்தரவின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று, வங்கனுார் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். வாகனத்தில் வந்த இரு வாலிபர்களிடம், தலா 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், வங்கனுாரைச் சேர்ந்த கோவிந்தராஜன், 27, எழில்மாறன், 19, என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை