மேலும் செய்திகள்
பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது
27-Nov-2024
திருத்தணி:ஆந்திர மாநிலம், திருப்பதி, புத்துார் மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணி வழியாக, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி போலீசார் வாகன தணிக்கை நடத்தினர்.அப்போது, ஒரு தனியார் பேருந்தில், 8 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்த ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஐப்பேடு சாந்தி,56, அரக்கோணம் பாலாஜி, 51, என, தெரிய வந்தது.
27-Nov-2024