உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலரில் சாராயம் கடத்திய இருவர் கைது

டூ - வீலரில் சாராயம் கடத்திய இருவர் கைது

திருத்தணி: ஆந்திர மாநிலம், ஓஜி குப்பம் பகுதியில் இருந்து திருத்தணி தாலுகா பூனிமாங்காடு வழியாக சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் மாறுவேடத்தில் நேற்று தமிழக-ம், ஆந்திர மாநில எல்லையான பூனிமாங்காடு வெங்கடாபுரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து பூனிமாங்காடு நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த இருவர் 15 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து என்.என்.கண்டிகையைச் சேர்ந்த மணிகண்டன், 30. வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 55 இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ