உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலை சேதம்

வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலை சேதம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சியில் ஸ்ரீதேவிக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து வெண்மனம்புதுார் ஏரிக்கரை வழியாக செல்லும் ஒன்றிய சாலையை வெண்மனம்புதுார், செஞ்சி பானம்பாக்கம், காரணி மற்றும் விடையூர் செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை மிகவும் சேதமடைந்து, மண் சாலையாக இருந்தது. இதையடுத்த ஐந்தாண்டுகளுக்கு முன் இந்த சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.மேலும் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் விடையூர் ஏரியில் அரசு அனுமதியுடன் சவுடு மணல் அள்ளும் பணி நடந்து வந்தது.இதையடுத்து சவுடு மணல் லாரிகள் இந்த ஏரிக்கரை சாலை வழியே சென்றதால் சில இடங்களில் சாலை சேதமடைந்து பள்ளங்கள் உருவாகியுள்ளன.இந்த ஏரிக்கரை சாலையை வெண்மனம்புதுார், செஞ்சி பானம்பாக்கம்,காரணி மற்றும் விடையூர் செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை