உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கேட்டு திருவள்ளூரில் முற்றுகை போராட்டம்

பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கேட்டு திருவள்ளூரில் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் வளர்ச்சி என்ற பெயரில் சாலை, மேம்பாலம், ரயில்பாதை அமைக்க நிலம், வீடுகள், கடைகள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகின்றன.இதில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 205க்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் பட்டறைபெரும்புதுார் பகுதியில் உள்ள டோல்கேட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, கோஷங்கள்எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்த போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி, குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ்பாபு, லோகேஸ்வரன், கலால் டி.எஸ்.பி., லட்சுமிபிரியா இன்ஸ்பெக்டர் திருவள்ளூர் நகரம் அந்தோணிஸ்டாலின், தாலுகா வெற்றிச்செல்வன், மணவாள நகர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.டோல்கேட் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 108 ஆண்கள், 30 பெண்கள் என, 138 பேரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து, திருவள்ளூர் ஏ.கே.என். தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மாநிலத் தலைவர் பி.சண்முகம் கூறியதாவது:''திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமலே இழப்பீடு வழங்காமலேயே கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளாகியும் இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. கடந்த, 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ''இரு மாதங்களுக்கு முன், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், கலெக்டர் பிரபுசங்கர், நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என, உறுதி அளித்தார். ஆனால், இன்று இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார்.''இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்''.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ