கிராம உதவியாளர்கள் போராட்டம்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வாயிலில், கிராம உதவியாளர்களின் போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகிக்க, வட்ட செயலர் மல்லிகார்ஜூனன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் அருள் சிறப்புரை ஆற்றினார்.இதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், கிராம உதவியாளர்கள் இறந்தால் அந்த குடும்ப வாரிசுக்கு வழங்கி வந்த வேலையை தொடர்வது, கிராம உதவியாளர்களை மாற்று பணிக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.