உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  புதிய பள்ளி கட்டடத்தில் குடிநீர் தரம் கேள்விக்குறி

 புதிய பள்ளி கட்டடத்தில் குடிநீர் தரம் கேள்விக்குறி

ஆர்.கே.பேட்டை: அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில், குடிநீர் குழாய் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், குடிநீரின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் 2.35 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. இதனால், மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை வசதி கிடைத்துள்ளது. இந்நிலையில், புதிய வகுப்பறை கட்டடத்தை ஒட்டி, நுழைவாயில் அருகே மாணவர்களுக்கான குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. குழாய்க்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளது. இதனால், குடிநீர் குடிக்க வரும் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மூன்றடுக்கு வகுப்பறை கட்டடம், 2.35 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான குடிநீர் குழாய் சேதமடைந்து இருப்பது, பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, குடிநீர் குழாய் மற்றும் அதையொட்டிய கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை