மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
15 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
15 hour(s) ago
கோவிலில் ரீல்ஸ் எடுத்த மூன்று பெண்கள் மீது புகார்
15 hour(s) ago
வியாசர்பாடி: வியாசர்பாடி, பள்ளி தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் கண்ணன், 24. இவர், சினிமா துறையில் துணை நடிகராக உள்ளார். 'ஆன்லைன் ஆப்' ஒன்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தார்.அதில், அகிலா என்ற பெண் குறுந்தகவல் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பின் இருவரும் சாட்டிங் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனக்கு பணம் அனுப்பினால், தன் ஆபாச வீடியோக்கள் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.இதை நம்பிய தாமோதர கண்ணன், அந்த நபரின் 'ஜிபே' எண்ணிற்கு 15,000 ரூபாய் அனுப்பியுள்ளார். பின் அந்த நபரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இது குறித்து, தாமோதரன் கண்ணன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago