மேலும் செய்திகள்
கடல் ஆமைகள் முட்டையிடும் பருவம் துவக்கம்
6 minutes ago
செவிலியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
7 minutes ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - சிறுவாபுரி இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்வர். ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி செல்கின்றனர். ஊத்துக்கோட்டையில் இருந்து செல்ல பெரியபாளையம் சென்று பின் அங்கிருந்து சிறுவாபுரி செல்ல வேண்டும். எனவே, செவ்வாய்க்கிழமைகளில் ஊத்துக்கோட்டையில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 minutes ago
7 minutes ago