உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

 பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே, பெண்ணிடம், 14 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கட்டிமேடை சேர்ந்தவர், பீர் முகமது மனைவி ஹமீது ஜோஹ்ரான், 37. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், வீட்டில் தனியாக வசிக்கிறார். இவரிடம், ஏப்ரல், 9ல், 'வாட்ஸாப்' காலில் பேசிய மர்ம நபர், அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொகையை செலுத்தினால், இரட்டிப்பாக கிடைக்கும் என, தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஹமீது ஜோஹ்ரான், அந்த நபர் அனுப்பிய, பல வங்கி கணக்குகளில், 14 லட்சம் ரூபாயை செலுத்தினார். சில மாதங்கள் கழித்து, வாட்ஸாப் காலில் பேசுவதை அந்த நபர் நிறுத்தி விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹமீது ஜோஹ்ரான், திருவாரூர் சைபர் கிரைம் போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார், 44,000 ரூபாயை கைப்பற்றி, அந்த பெண்ணை ஏமாற்றியவர் குறித்து தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி