உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் மோதி பெண் பலி

அரசு பஸ் மோதி பெண் பலி

பெரியபாளையம்,:பெரியபாளையம் அருகே, மதுரவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி ரதிதேவி, 31. நேற்று இவர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்று விட்டு, உறவினர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது கன்னிகைப்பேர் கிராமத்தில் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது, பின்னால் வந்த அரசு பஸ், தடம் எண்.131எ பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ