உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நாய் மீது பைக் மோதி பெண் படுகாயம்

 நாய் மீது பைக் மோதி பெண் படுகாயம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தை சேர்ந்தவர் துர்கா, 30. நேற்று காலை ஸ்கூட்டி வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு வந்தார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலை, அகூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது. துர்கா ஓட்டிய வாகனம் நாய் மீது மோதியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை