பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது
ராயபுரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர், 12 வயது சிறுமி; இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டருகே வசிக்கும் குணசேகர், 37, என்பவர், சிறுமிக்கு ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டை, நாகூரார் தோட்டத்தை சேர்ந்த குணசேகரை, போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.