| ADDED : நவ 24, 2025 04:05 AM
ஆர்.கே.பேட்டை: முன்விரோதம் காரணமாக மூதாட்டியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கிருஷ்ணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா, 52. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 32, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கர், நேற்று காலை லதா வீட்டிற்கு சென்றார். அங்கு லதா இல்லாததால், அவரது தாய் நாகம்மாள், 70, என்பவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினார். இதுகுறித்து, நாகம்மாள் அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.