மேலும் செய்திகள்
தம்பதி சண்டை : வீடியோ எடுத்ததால் கோஷ்டி மோதல்
27-Sep-2025
கொடுங்கையூர்: பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மண்டை உடைந்தது. கொடுங்கையூர், கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், தன் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி, ஆனந்த் குருபாலன் ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டருகே பட்டாசு வெடித்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மோகன்ராஜ், ரவிகுமார் ஆகியோர் மீது பட்டாசு தீப்பொறி பட்டதால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில், ரவிகுமாரின் மண்டை உடைந்து, 3 தையல் போடப்பட்டுள்ளது. மணிகண்டன் தலையிலும் அடிப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, நேற்று இருதரப்பினர் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Sep-2025