உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சுகாதார அதிகாரியை எங்குமே பார்க்க முடியவில்லை : தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார நிலை படுமோசம்

சுகாதார அதிகாரியை எங்குமே பார்க்க முடியவில்லை : தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார நிலை படுமோசம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரியை எங்குமே பார்க்க முடியவில்லை.தூத்துக்குடியில் சுகாதார நிலை மிக மோசமாக இருப்பதாக நேற்றைய கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசமாக புகார் கூறினர். தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பு கூட்டம் மற்றும் அவசர கூட்டம் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர் பிரின்ஸ், நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன், சுகாதார அதிகாரி டாக்டர் போஸ்கோ ராஜா, நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முதலில் சிறப்பு கூட்டம் துவங்கியது. மேயர் கிளார்க் துரைமணி அஜென்டா தீர்மானத்தை வாசித்தார். தூத்துக்குடி மாநகராட்சியுடன் அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய ஐந்து பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகை மற்றும் பரப்பளவு மற்றும் வருமானம் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 40 வார்டுகளாகவும், தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து உள்ளாட்சிகளுக்கு 20 வார்டகளும் சேர்த்து மொத்தம் 60 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.உத்தேச வார்டுகள் எல்லை குறித்த விபரப்பட்டியல் மற்றும் விரிவாக்கப்படும் மாநகராட்சியின் உத்தேச வார்டுகள் எல்லை குறித்த விபரங்கள் மாமன்றத்தின் பார்வைக்கும், முடிவுக்கும் வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரி (ஹெல்த் ஆபிசர்) யார் என்றே தெரியவில்லை. சுகாதார அதிகாரி மாநகராட்சியில் இருக்கிறாரா...மாநகராட்சியில் சுகாதாரம் படு மட்டமாக இருக்கிறது. எங்கும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. முறையாக சாக்கடைகள் அள்ளப்படவில்லை. முன்பு இருந்த சுகாதார அதிகாரி காலையில் ரவுண்ட் சென்று தெருக்களை பார்வையிடுவார்.ஆனால் தற்போதுள்ள அதிகாரி எங்கும் செல்வதாக தெரியவில்லை. எங்கள் வார்டு பக்கம் அவர் வந்ததே இல்லை என்று அதிமுக கவுன்சிலர் வீரபாகு புகார் கூறினார். அவரது கருத்துக்கு மற்ற கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக ஆதரவு அளித்தனர்.ஆனால் மேயர் கஸ்தூரிதங்கம் மட்டும் சுகாதார அதிகாரி தெருக்களில் ரவுண்ட் போகிறார் என்று கூறினார். அதற்கு வீரபாகு மேயர் வீட்டை சுற்றி மட்டும் தான் குப்பைகள் அள்ளப்படுகிறது. அவர் வீட்டு பகுதிக்கு மட்டும் சுகாதார அதிகாரி சென்று பார்க்கிறார் போலும். இதனால் தான் எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது மேயர் மட்டும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றார்.கூட்டத்தில் சுகாதாரம் சம்பந்தமாக கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரி பதில் பேச வேண்டும். ஆனால் இதுவரை அவர் பேசியதில்லை. மேயர் தான் பதில் அளிக்கிறார் என்று கூற கூட்டத்தில் திடீர் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.மாநகராட்சி பகுதியில் முக்கிய தெருக்களில் மழைநீர் வடிகால் அமைத்தல், தூத்துக்குடி சாமுவேல்புரம் பள்ளி,சிவந்தாகுளம் பள்ளி, ஜின் பாக்டரி பள்ளி, தெற்கு புதுத்தெரு பள்ளி, மேலூர் பள்ளி, சண்முகபுரம் பள்ளி, எஸ்.எஸ்.தெரு பள்ளி ஆகியவற்றிற்கு 20 லட்ச ரூபாய் செலவில் கல்வி நிதியில் இருந்து மேஜை, கம்யூட்டர் மென்பொருள் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுதல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ