உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / உடன்குடி யூனியனில் தேர்தல் பயிற்சி முகாம்

உடன்குடி யூனியனில் தேர்தல் பயிற்சி முகாம்

உடன்குடி : உடன்குடி பஞ்.,யூனியனில் தேர்தல் பயிற்சி நடந்தது.உடன்குடி பஞ்.,யூனியனில் உள்ளாட்சி தேர்தலையொட்டி கிராம பஞ்.,வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது. பஞ்.,யூனியன் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் தேவராஜ் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். ஏ.பி.டி.ஓ.,(ஊராட்சிகள்) சுடலை வரவேற்றார். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உடன்குடி பஞ்.,யூனியன் ஆணையாளர் முருகன், பி.டி.ஓ.,நாகராஜன் ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாச்சியார், பாக்கியவதி, ராணி, ராஜேஸ்குமார், பாலசுப்பிரமணியன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை