உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மெஞ்ஞானபுரம் நுகர்வோர் பேரவையில் முப்பெரும் விழா

மெஞ்ஞானபுரம் நுகர்வோர் பேரவையில் முப்பெரும் விழா

உடன்குடி :மெஞ்ஞானபுரத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை முப்பெரும் விழா நடந்தது.மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம், காமராஜர் கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, பயிற்சி, ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் பால்டேனியல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாவட்ட கௌரவ ஆலோசகர் பாஸ்கரப்பாண்டியன், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சாத்தான்குளம் வட்டார தலைவர் கார்த்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நுகர்வோர் மாவட்ட சட்ட ஆலோசகர் சாத்ராக் பெண்ணுரிமை சட்டம் பற்றியும், கிறிஸ்டோபர் ஜெபராஜ் உரிமையியல் சட்டம் பற்றியும், பிரகாச வினோக் வாகன விபத்து சட்டம் பற்றியும், திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் பரமேஸ்வரன் வட்ட சட்ட பணிகள் குறித்தும், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மெஞ்ஞானபுரம் நகர தலைவர் சாமுவேல் சுற்றுப்புறச்சூழல் பற்றியும் பேசினர். காமராஜர் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு மக்கள் நீதிமன்ற உறுப்பினர் மோகனசுந்தரம் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் பால்டேனியல் மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பயிற்சி ஆசிரியர்களாக பணியாற்றிய மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஜான்சன் ஆபிரகாம், ஜெபத்துரை, மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் ஹெலன் ஜான்சிராணி, முத்துராணி, ஜாய்அன்னகுமாரி ஆகியோர்களுக்கு நினை வு பரிசு வழங்கினர். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜோயினா, சங்கீதா, 2ம் பரிசு பெற்ற முகமது யூசுப், முத்து சங்கர், 3ம் பரிசு பெற்ற பொன்சுந்தரி, ராதா, ஜெஸிபா நேசமலர் ஆகியோருக்கும், கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பெவின்ஜேக்கப், பபிதா, தேவி, 2ம் பரிசு பெற்ற ஜோயன்னா, ஜெபரதிஷர்லின், அகஸ்டா ஆகியோருக்கும், 3ம் பரிசு மு றையே ராம்குமார், சர்மிளா, ராஜதுரை ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. ஜோசப் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ