உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பணத்தகராறில் பெயின்டர் கொலை

பணத்தகராறில் பெயின்டர் கொலை

கோவில்பட்டி:கோவில்பட்டியில் பணத் தகராறில் பெயின்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 42. பெயின்டரான இவர் வட்டித்தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி, வீரவாஞ்சி நகரில் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது சிலர் அவரை தேடி வந்தனர். அவர்களுடன் முத்துப்பாண்டி வெளியே சென்றார். அதன் பிறகு இரவில் அங்குள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முத்துபாண்டியிடம் கடன் வாங்கியிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி