உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரேஷன் அரிசி கடத்திய மேலும் 6 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய மேலும் 6 பேர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம் நான்காவது தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தனிப் பிரிவு எஸ்.ஐ., ஸ்டீபன் ராஜ் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில், 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 23 முதல் 31 வயது வரையிலான ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வேன், மூன்று டூ - வீலர்களை போலீசார் பறிமுதல் செய்து, துாத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.கோவில்பட்டியில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக கோவில்பட்டி ஆலம்பட்டியைச் சேர்ந்த பால மணிகண்டன், 40, ஏப்., 25ல் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை கள்ளச்சந்தைக்காரர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க துாத்துக்குடி கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை