உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இன்ஜினியர் வீட்டில் 65 சவரன் நகை திருட்டு

இன்ஜினியர் வீட்டில் 65 சவரன் நகை திருட்டு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் சாமி, 45. இவர், அபுதாபியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி, 40, இரண்டு குழந்தைகளுடன் வில்லிசேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.சுந்தரி வழக்கம் போல வீட்டை பூட்டி மற்றொரு அறையில் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு, லாக்கரில் இருந்த 65 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.கயத்தாறு காவல் நிலையத்துக்கு சுந்தரி தகவல் தெரிவித்தார். போலீசார், கைரேகை பிரிவு நிபுணர்கள் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் 65 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ