மேலும் செய்திகள்
நடத்தை விதி மீறிய எஸ்.ஐ., பெண் போலீஸ் சஸ்பெண்ட்
07-Sep-2025
ஆட்டோ டிரைவர் கொலை உறவினர்கள் போராட்டம்
06-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு, பெங்களூருவில் இருந்து பார்சல் சர்வீஸ் வாயிலாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாரின் தீவிர சோதனையில், தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்கு வந்த இரண்டு மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர்.அதில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. மேலும், அந்தப் பார்சலை கோவில்பட்டி கணேஷ் நகர் ஜேசுராஜ், 38, வெங்கடேஷ் நகர் செல்வராஜ், 34, ஆகிய இருவரும் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், கடத்திக் கொண்டு வரப்பட்ட 130 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைதான ஜேசுராஜின் சகோதரர் பிரகாஷ் தி.மு.க., சிறுபான்மை அணியில் நிர்வாகியாகவும், அவரது மனைவி ஜேஸ்மின் லுார்து மேரி கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
07-Sep-2025
06-Sep-2025