உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / போலீஸ் குடியிருப்பில் மட்டும் திருடிய பலே திருடன் சிக்கினார்

போலீஸ் குடியிருப்பில் மட்டும் திருடிய பலே திருடன் சிக்கினார்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள போலீஸ் குடியிருப்பில் கடந்த, 16ம் தேதி போலீஸ்காரர் செந்தில்முருகன், 35, பெண் போலீஸ் கிருபா, 29, ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்தது. செந்தில்முருகன் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, 10 சவரன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார்.மூன்றாவது மாடியில் வசிக்கும் கிருபா வீட்டின் பூட்டை உடைத்த நபர், அங்கு எதுவும் சிக்காததால், வெறும் கையுடன் சென்றார். விளாத்திகுளம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், திருட்டு தொடர்பாக ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணியைச் சேர்ந்த உமாபதி, 32, என்பவரை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் பகுதியில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குடியிருப்பில், உமாபதி முதலில் திருடியுள்ளார். தொடர்ந்து, வரிசையாக தேவிப்பட்டினம், திருப்பூர், பல்லடம், கோவை ஆகிய ஊர்களில் போலீஸ் குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து திருடியுள்ளார். ஆக., 16ம் தேதி இரவு, செந்தில் முருகன், கிருபா ஆகியோர் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை